உள்நாடுபிராந்தியம்

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

பதுளை, பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை 04.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸார் மற்றும் பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் – சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor

திங்கள் முதல் சீனி விலையில் குறைவு