உள்நாடு

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்

சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலலவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக்க ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று (04) கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வரான ஜோஹான் பெர்னாண்டோ, சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Related posts

சரத் பொன்சேகா படுகொலை முயற்சி – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

editor

பங்களாதேஷிடமிருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவி

இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழு ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம்

editor