உள்நாடுபிராந்தியம்

சட்ட விரோதமாக தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது!

சம்மாந்துறை பொலிஸாரினால் சம்மாந்துறை, வங்களாவடி பிரதேசத்தில் இன்று (29) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல ஆயிரம் பெறுமதி வாய்ந்த தேக்கு மரக்குற்றிகளோடு சட்ட விரோதமாக பயணம் செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த தேக்கு மரக்குற்றிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை விளினியடி 02 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என்பதோடு கடத்தப்பட்ட மரக்குற்றிகளோடு சந்தேக நபர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் அறிவுறுத்தலுக்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பணி இடைநீக்கம்

editor

பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற சுந்தரலிங்கம் பிரதீப்

editor

அரசிற்கு மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை