உள்நாடு

சட்டவிரோத மது அருந்தி 6 பேர் உயிரிழப்பு – முக்கிய சந்தேக நபர் கைது!

சட்டவிரோத மதுபானம் அருந்தி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஐவரின் பிரேத பரிசோதனைகள் சிலாபம் மருத்துவமனையில் நடத்தப்பட்டு, இந்த மரணங்கள் மது விஷம் காரணமாக நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த மற்றையவரின் பிரேத பரிசோதனை இன்று (08) சிலாபம் மருத்துவமனையில் நடத்தப்படவுள்ளது.

மது அருந்தியதால் சுகவீனமடைந்த மேலும் 8 பேர் நீர்கொழும்பு மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கடந்த 6 ஆம் திகதி சட்டவிரோத மது அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்தது குறித்து வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர், அதன்படி இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இருவரும் நேற்று (07) மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 19 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரசியல் பழிவாங்கல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் 20 ஆம் திகதியுடன் நிறைவு

ICC சிறந்த வீரருக்கான விருதை பெற்ற வனிந்து ஹசரங்க!

முன்னாள் அமைச்சர் தயாரத்ன காலமானார்!

editor