உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் பினர போயா தினமான இன்று 07.09.2025 சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலை குறித்த தோட்டத்திலுள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள மரக்கறி தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றினர்.

பினர போயா தினத்தன்று உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், சந்தேக நபர் அதிக விலைக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதுபான போத்தல்களை வாங்கி கொண்டு வந்து தனது தோட்டத்தில் புதைத்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று ஹட்டன் தலைமையகப் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-​க.கிஷாந்தன்

Related posts

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு – சந்தேகநபர் கைது.

இதுவரை 103 பேர் சிக்கினர் 

அனைத்து நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்