உள்நாடு

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 7,600 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (08) இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவருகிறது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது – அங்கஜன்

editor

கொழும்பு பேர வாவியில் உயிரிழக்கும் பறவைகள்

editor

தேர்தல் காலத்தில் தவளைகள் போல் பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை – நாமல்

editor