வகைப்படுத்தப்படாத

சட்டவிரோதமாக தங்கியிருந்த 121 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UDHAYAM, COLOMBO) –     குவைத் சென்று தமது ஒப்பந்தம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட 121 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை இலங்கைக்கு திருப்பி அழைக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இவர்களை திருப்பி அழைக்கும் முயற்சிகளில் குவைத் தூதரகம் உதவி செய்திருந்தது.

2016ம் ஆண்டு குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆயிரத்து 324 பேர் திருப்பி அழைத்துவரப்பட்டிருந்தார்கள். 2015ம் ஆண்டு அழைத்து வரப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 800ற்கும் அதிகமாகும்.

Related posts

Three-Wheeler travelling on road erupts in flames

கனடாவை தாக்கிய ‘டோரியன்’ புயல் – 5 லட்சம் பேர் பாதிப்பு

டொனால்ட் டிரம்ப் – நரேந்திர மோடி பேச்சுவார்த்தை