உள்நாடு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் விவகாரம் – பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை!

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (30) அவரை முன்னிலைப்படுத்திய போது 2 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் பூங்காவில் இருந்து அண்மையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ஒன்றரை மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 346 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்