சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலய உரிமையாளரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர், கடந்த 17 ஆம் திகதி நாராஹேன்பிட்டிய பகுதியில் சிறப்பு பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.