உள்நாடு

“சட்டத்தின் மீதான பயம் நீங்கியது”

(UTV | கொழும்பு) – நாட்டின் சட்டத்தின் மீதான அச்சம் சமூகத்தில் படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்துகின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தின் ஆட்சி முறையாகச் செயற்படுகிறதா என்ற பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் திறனைக் குறைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் சுசில் பிரேமஜயந்த கருத்து வெளியிட்டார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் முறை துரிதப்படுத்தப்படுமானால், நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறைவதற்கு அது காரணமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக உயர்வு

திங்கள் முதல் நடைமுறையாகும் சட்டங்கள்

இலங்கை மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி இடையில் சந்திப்பு!