அரசியல்உள்நாடு

சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுபடுத்த முடியும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்றுமுன்தினம் (11) இடம்பெற்ற பஸ் விபத்து செய்தியை கேட்டு நான் மிகவும் வேதனை அடைகின்றேன் என்று பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேற்படி பஸ் விபத்தில் மரணமடைந்த அனைத்து உள்ளங்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் மேற்படி விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் உறவுகள் அனைவரும் நல்ல நிலையில் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் சட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுபடுத்த முடியும்.

நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் தடுப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்று தனது இரங்கல் செய்தியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மேலும் தெரிவித்துள்ளார்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து

கருணாவை கைது செய்யுமாறு அடிப்படை உரிமை மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.