உள்நாடு

சஜித் பிரேமதாசவுக்கு அச்சுறுத்தல்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணி இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.

தனோவிட்டவில் இருந்து ஆரம்பமான போராட்டம் யக்கல வரை தொடரும். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தனிப்பட்ட தகைமைகள் இருக்கின்ற அதேவேளை அரசாங்க தரப்புக்குள் முரண்பாடுகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

பல குறைபாடுகளைக் கொண்ட அரசாங்கம் தற்போது இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும், சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை பண ஆதாயத்திற்காக அரசாங்கம் விலைக்கு வாங்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விற்பனைக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்கத் தவறினால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிடும் எனவும் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஆணை தமக்கு கிடைத்துள்ளதாகவும், மக்களின் ஆசியுடன் விருப்பத்துடன் பதவி விலகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் விடுதலை

editor

இந்தியா பறந்தார் ஜனாதிபதி அநுர

editor

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு இன்று