அரசியல்உள்நாடு

சஜித்திற்கு ஆதரவு என்ற முடிவில் எந்த குழப்பமும் இல்லை – சுமந்திரன் எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற இலங்கை தமிழரசு கட்சியின் நிலைப்பாடு குறித்து எந்தவித குழப்பமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

தனது எக்ஸ் தள பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

செப்டம்பர் முதலாம் திகதி வவுனியாவில் அறிவிக்கப்பட்டது போன்று இலங்கை தமிழரசுகட்சி 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற உத்தியோகபூர்வ முடிவை எடுத்துள்ளது.

எனது கட்சியின் அனைத்து உறுப்பினர்களினதும் நிலைப்பாடும் இதுவே எனது நிலைப்பாடு, இந்த நிலைப்பாடு குறித்து எந்த குழப்பமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

editor

விசா செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பு

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்

editor