விளையாட்டு

சச்சின் சாதனையை முறியடித்த ராகுல்

(UTV | துபாய்) – பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் சச்சின் சாதனையை பஞ்சாபின் கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் மிக வேகமாக 2000 ஓட்டங்களை எடுத்து சாதனை செய்தவர் சச்சின் தெண்டுல்கர் என்பது யாவரும் அறிந்ததே. அந்த சாதனையை நேற்று கேஎல் ராகுல் முறியடித்தார்.

சச்சின் டெண்டுல்கர் 63 இன்னிங்சில் 2000 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் 60 இன்னிங்சில் 2000 ஓட்டங்களை எடுத்து சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒரு சதத்திற்கு மேல் எடுத்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். கே.எல். ராகுல் அடிக்கும் இரண்டாவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது

அதேபோல் பெங்களூர் அணியை இதற்கு முன்னர் பஞ்சாப் அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வென்று இருந்தது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வென்றதால் இரண்டாவது அதிகபட்ச ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியை அந்த அணி நேற்றைய போட்டியில் பெற்றதோடு, ராகுல் மிக அபாரமாக விளையாடி 132 ஓட்டங்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 240

இலங்கையில் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி

T20 பந்துவீச்சாளர் தரப்படுத்தல் பட்டியலில் வனிந்து ஹசரங்கவுக்கு முதலிடம்