அரசியல்உள்நாடு

சகல ஜனநாயக அமைப்புகளும் ஜேவிபி மயமாக்கலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்படுகின்றன – சஜித் பிரேமதாச

இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையொன்று எழுந்து வருகின்றது. சமூகத்தில் காணப்படும் சகல நிறுவனங்கள், அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் ஜேவிபி மயமாக்கலுக்கு ஆளாகி வருகின்றன.

இளைஞர் கழங்கள், பிரதேச இளைஞர் சம்மேளனங்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பனவற்றை ஜேவிபியின் அரசியல் கைப்பாவைகளாக மாற்ற பல உபாய ரீதியிலான செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு தமது நெருங்கியவர்களை நியமித்து ஜேவிபியின் அரசியல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று (02) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச வைத்தியசாலை குழுக்கள் கூட தற்போது ஜேவிபி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அரசியல் தலையீட்டுக்கு உள்ளாகி வருகின்றன.

எதிர்காலத்தில், ஜனநாயகத்தை ஒருபுறம் தூக்கி வீசிவிட்டு கிராமிய அபிவிருத்திச் சங்கம், சமூக அபிவிருத்திச் சங்கம், மகளிர் சங்கங்கள், மரண சங்கங்கள், ஓய்வூதியதாரர் சங்கங்கள் போன்றவற்றில் பதவிகளை மக்கள் விடுதலை முன்னனணியினர் பகிர்ந்து கொள்வர்.

விவசாயிகள் சங்கங்கள், மீனவர்கள் சங்கங்கள், தேயிலை சங்கங்கள், ரப்பர் சங்கங்கள், ஏற்றுமதி பயிர்ச் செய்கைகளில் ஈடுபவோர்களின் சங்கங்கள் என இது வியாபித்து, விகாரைகளில் விகாராதிபதிகளாக யார் இருக்க வேண்டும் என்பதையும் இந்த மக்கள் விடுதலை முன்னனணியினரே தீர்மானிக்கும் நிலை ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளன.

இந்தப் போக்கு இன்றளவில் அதிகரித்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கட்சி, இனம், மதம், வர்க்க வேறுபாடுகள் இல்லாமல் மக்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய தன்னார்வ அமைப்புகளில் அரசாங்கம் தலையீட்டை செய்து வருகிறது.

இந்த சவால்களை எதிர்கொள்ள அடி மட்டத்தில் மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் மாத்திரமே இதனை சமாளிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பெரும்பாலான இறப்புகள் காசநோயால் பதிவாகியுள்ளன – விசேட வைத்திய நிபுனர் சமன் கபிலவன்ச.

editor

தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பான சட்ட தயாரிப்பு பணி இறுதி கட்டத்தில்

நான்கு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு