சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு…

(UTV|COLOMBO)-இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.

விண்ணப்பித்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாவிட்டால் அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் விரைவாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வந்து திருத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வருடம் புதிதாக அடையாள அட்டை பெறுவதற்கு மூன்று இலட்சத்து 95 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான வயதெல்லை 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தகது.

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

VAT வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்தின் விலை அதிகரிப்பு..!

கஞ்சிபான இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கும் பிணை