விளையாட்டு

க்றிஸ் கெய்லுக்கு தொற்று இல்லை

(UTV | ஜமைக்கா) – மேற்கிந்திய கிரிக்கட் வீரரான க்றிஸ் கெய்லுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்குபற்றியிருந்த கிறிஸ் கெய்ல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாவுள்ள இந்தியன் பிரீமிய லீக் போட்டிகளில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி சார்பாக பங்குபற்றுவதற்கு விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல கால்பந்து பயிற்சியாளருக்கு கொரோனா

பகலிரவு டெஸ்ட்டுக்கு முழு பலத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து

பங்களாதேஷ் – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு