உள்நாடு

கோழி இறைச்சி விற்பனையில் பாரிய மாற்றம்

மக்களுக்கு போதுமான வருமானம் இல்லாததால், நாட்டில் தினசரி கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன் குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஒரு நாளைக்கு 600 மெற்றிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்போது 500 மெற்றிக் தொன் இறைச்சியே விற்பனையாகின்றது.

கோழி இறைச்சிக்கான தேவை குறைந்து வருவதால், இறைச்சி மற்றும் முட்டையின் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கோழி மற்றும் முட்டை விலைகள் குறைந்துள்ளதால், கோழி பண்ணை உரிமையாளர்கள் தங்கள் உற்பத்தி செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு

கொரோனாவிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்