உள்நாடு

கோள் மண்டல காட்சி கூடம் செவ்வாயன்று திறப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோள் மண்டல காட்சி கூடத்தினை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் பணிப்பாளர் கே. அருணு பிரபா பெரேராவினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி முதல் சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கோள் மண்டல காட்சிகள் சமூக இடைவெளி சட்டத்திற்கேற்ப வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பராக்கிரம வாவிக்குள் பஸ் விழுந்ததில் 23 பேர் காயம்

16 பவுண் தங்க நகைகளை திருடிய 18 வயதான இளைஞனும் உடந்தையாக இருந்த நண்பனும் கைது

editor

ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம்!

editor