கேளிக்கை

கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில்

(UTV |  இந்தியா) – விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இதனிடையே இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் ஒன்று வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இது ஒரு பொய்யான தகவல், இதில் உண்மை இல்லை என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

Related posts

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்றால் வாசனை திறனை இழந்தார் பிரபல பாடகர்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய்