‘கோப்பிகட’ தொலைக்காட்சி நாடகத்தின் இயக்குநரான சுதம் சந்திம தயாரத்ன நேற்று (21) கொலன்னாவை, சாலமுல்லவில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்து காணப்பட்டதாக வெல்லம்பிட்டி பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இறக்கும் போது 53 வயதான சுதம் சந்திம, இரண்டு குழந்தைகளுக்கு தந்தை, மேலும் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.
தயாரத்னவின் மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததால் நிலையில் அவரது கணவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் சந்தேகமடைந்து வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்துள்ளார்.
வீட்டின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தபோது, அறையில் படுக்கையில் அவர் இறந்து கிடந்ததைக் கண்டார்.
திடீர் உடல்நலக்குறைவு இந்த மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் முதலில் சந்தேகிக்கின்றனர்.
மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது, மேலும் உடலை கொழும்பு பொலிஸ் பிரேத அறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
சம்பவம் குறித்து வெல்லம்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.