உள்நாடுவணிகம்

கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஒருகட்டமாக அதிகுறைந்த விலையில் நூடில்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எயார்டெல் வழங்கும் வரையறையற்ற அழைப்புகள்

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட

மினுவாங்கொடை கொத்தணியில் 2,122 பேருக்கு தொற்று