சூடான செய்திகள் 1

கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணத்திற்கு “உத்தர தேவி”

(UTV|COLOMBO)-இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இரட்டை வலுகொண்ட தொடருந்து தொகுதிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இந்த தொடருந்தின் பரீட்சார்த்த பயணம் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 6 மணிக்கு போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் குறித்து தொடருந்து, நாளாந்தம்  முற்பகல் 10.45க்கு கொழும்பிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்க உள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் இரட்டை வலுகொண்ட 5 தொடருந்து தொகுதிகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், சீனாவிலிருந்தும் இரட்டை வலுகொண்ட தொடருந்து தொகுதி ஒன்று கொள்வனவு செய்யப்பட உஎள்ளதாக தொடருந்து திணைக்கள முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி