உள்நாடுசூடான செய்திகள் 1

கோட்டாபய ராபஜக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் – சந்திரிக்கா

(UTV | கொழும்பு) –    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் விரைவில் தீர்மானம் எடுக்கும் என தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைப்பற்றிக் கொள்ள ராஜபக்சர்கள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். மொட்டு கட்சியினால் வெற்றியீட்ட முடியாது எனவும், அதனால் சுதந்திரக் கட்சியை கைப்பற்ற ராஜபக்ச தரப்பு முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த சூழ்ச்சிக்கு மைத்திரிபால சிறிசேன உடந்தையாக செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விமான நிலையத்தில் தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

editor

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – சம்பளம் அதிகரிப்பு ?