முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தற்போது வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம், இவர் நாட்டிலேயே உள்ளதாகக் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட உள்ளாரா என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கிருந்தும் உத்தியோகபூர்வ அழைப்புக்கள் வரவில்லை.
சில யூடியூபர்கள் பிரபஞ்சத்திலிருந்து செய்திகளைப் பெற்றுள்ளார்களா என்பது எங்களுக்குத் தெரியாது.
சில மோசமான யூடியூபர்கள் பிரபஞ்சத்திலிருந்து செய்திகளை எவ்வாறு பெறுகின்றனர் என்பது விந்தையே.
எங்கள் கொள்கைகளின் அடிப்படையில் எங்கள் சொந்த வழியில் செல்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்க என்ற நபருக்காக செயற்படவில்லை.
இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிரான சதித்திட்டத்திற்கு எதிராகவே செயல்படுகிறோம்.