சூடான செய்திகள் 1

கோட்டாபய தொடர்பில் வெளியாகிய தகவல் பொய்யானது

(UTV|COLOMBO)-முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெள்ளவத்தையில் தனிப்பட்ட காரியாலயமொன்று அமைக்கப்படுவதாக கூறியதில் எந்ததொரு உண்மையும் இல்லையென அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கருத்துக்கு கோட்டாபயவின் ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ நேற்று(24) மறுப்பு தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் காரியாலயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலர் கூறி வருகின்றனர்.

கோட்டபாய ராஜபக்ஷ, காரியாலயம் அமைக்க எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் காரியாலயம் அமைப்பது தொடர்பில் வேறு எவருக்கும் பொறுப்புக்களை கையளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

ரஷ்ய விஞ்ஞானியினால் தயாரிக்கப்பட்ட விசேட உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு