உள்நாடு

கோட்டாபய தொடர்ந்தும் சிங்கப்பூரில்..

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

கோட்டாபய ராஜபக்ச விரைவில் இலங்கை திரும்புவார் என நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் நாட்டில் தங்குவதற்கு சிங்கப்பூர் அவகாசம் வழங்கியுள்ளது.

Related posts

ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

editor

நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை செலுத்த அவகாசம்

தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவும்