சூடான செய்திகள் 1

கோட்டாபயவிற்கு எதிரான மனு விசாரணை 02 ஆம் திகதிக்கு

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராசிரியர் சந்திரகுப்தா தெனுவர மற்றும் காமினி விஜயங்கொட ஆகியோரால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று

அமைச்சரவை கூட்டங்கள் முற்பகல் 7.30க்கு

புறக்கோட்டை – மெனிங் சந்தையில்-நாட்டாமிகள் பணிப்புறக்கணிப்பு