உள்நாடு

கொஸ்கொட சுஜிக்கு நெருக்கமானவர் கைது

(UTV|கொழும்பு) – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவராக கருதப்படும் கொஸ்கொட சுஜி என்ற நபருடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அஹுங்கல்ல கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொஸ்கொடையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாயு துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்கொட சுஜி என்ற நபருடன் இணைந்து பாரியளவில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வெவ்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

Related posts

2022 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம்

6 வகையான பயிர்களுக்கு இழப்பீடு – அமைச்சரவை அங்கீகாரம்

editor

எகிறும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்