உலகம்

கொவிட் 19: பீஜிங் நகரத்துக்கு திரும்புபவர்களை தனிமைப்படுத்த தீர்மானம்

(UTV|சீனா) – சீனாவின் பீஜிங் நகருக்கு பிற நகரங்களில் இருந்து பிரவேசிக்கும் சகலரையும் 14 நாட்கள் தனித்தனி அறையில் தடுத்து வைக்க அந்த நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெளிநாடுகளில் இருந்து பீஜிங்கிற்கு பிரவேசிப்பவர்களுக்கு எத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் என சீனா தெளிவுப்படுத்தவில்லை என சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளன.

Related posts

ஒரே நாளில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று

 ஒடுக்குமுறை அனுபவிப்பவர்களுக்கு கனடா அடைக்கலம்!

கப்பலில் பரவியது கொரோனா வைரஸ் : 3,700 பயணிகளின் நிலை கவலைக்கிடம்