உள்நாடு

கொவிட் – 19 நிதியத்திற்கு 785 மில்லியன் ரூபாய் நன்கொடை

(UTV | கொவிட் – 19) – கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 785 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அனுமதி பெற்ற விமான பொறியியலாளர்கள் சங்கம் 1.5 மில்லியன் ரூபாவும், கிலக்சோ ஸ்மித் கிளைன் மருந்துப்பொருட்கள் நிறுவனமும் விஜய உற்பத்தி தனியார் நிறுவனமும் தலா 05 மில்லியன் ரூபாவும், நிஷிகோ சர்வதேச தனியார் கம்பனி, பீபல்ஸ் காப்புறுதி நிறுவனம் மற்றும் ரஷ்ய கல்வி மத்திய நிலையம் தலா ஒரு மில்லியன் ரூபாவும் கெமுனு ஹேவா ரெஜிமன்ட் சேவை சங்கம் ஐம்பதாயிரம் ரூபாவும் இன்று (21) நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

Related posts

40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – பிரதமர் ஹரிணி வௌியிட்ட தகவல்

editor

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் Disrupt Asia 2025 பிரதான மாநாடு

editor

பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்படும் – அது தொடர்பில் மாற்றுக் கருத்து கிடையாது – அமைச்சர் விஜித ஹேரத்

editor