உள்நாடு

கொவிட் 19 நிதியத்திற்கு 3 மில்லியன் ரூபாய் நன்கொடை

(UTVNEWS | கொவிட்–19) – ஸ்ரீ லங்கா வைத்திய நிர்வாகிகளின் மையத்தினால் கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 3 மில்லின் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மையத்தின் உறுப்பினர்கள் தங்களுடைய வேதனத்தின் ஒரு தொகையை ஒதுக்கி இந்த நிதியை வழங்கியுள்ளனர்.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

Related posts

கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

நிறுவனங்களில் COVID அதிகாரியை நியமிக்க அறிவுறுத்தல்

நாளை காலை 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்