உள்நாடு

கொவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசிகளை இலங்கையில் தயாரிக்க அனுமதி கோரி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்திருந்தார்.

அரச மருந்து கட்டுப்பாட்டு கூட்டுத்தாபனம், சினோவெக் பயோன்டெக் நிறுவனம் மற்றும் கெலுன் லைஃப் சயன்ஸ் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து இலங்கையில் கொவிட்-19 வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு தாம் ஒத்துழைக்கவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – CID கண்காணிப்பில்

இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகள்

சிறைச்சாலை கைதிகள் 23 பேருக்கு கொரோனா