கொழும்பு – மாளிகாவத்தை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (15) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவலை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
