கொழும்பு மாநகர சபையின் (CMC) வருடாந்த வரவு செலவுத் திட்டம் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 கவுன்சிலர்கள் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாநகர சபையின் 2ஆவது தடவையாக இடம்பெற்ற பாதீட்டு வாக்கெடுப்பில் கட்சியின் ஒழுங்கை மீறிய முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி சோஹரா புஹாரியின் பதவி நீக்கப்படுவதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு முதன்முதலில் டிசம்பர் 22 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது, 60 உறுப்பினர்கள் அதற்கு எதிராகவும், 57 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தன் அடிப்படையில் ஆளும் கட்சி பட்ஜெட் வாக்கெடுப்பில் தோல்வியை கண்டதும் குறிப்பிடத்தக்கது.
