கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான கலந்துரையாடலுக்காக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமைத்துவ சபையும், உச்ச பீடமும் நாளை கொழும்பில் கூடவுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து வெளியிடுகையில், சமீபத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எங்களை சந்தித்து கலந்துரையாடினோம். அத்துடன் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் திருமதி ரோஸி சேனநாயக்க உடனும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க வையும் சந்தித்து கலந்துரையாடினோம். அதுபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.
எல்லோருடனும் எங்களுடைய கொள்கைகளை விளக்கியுள்ளோம். யாருக்கு ஆதரவளிப்பது என்பதை நாளை கூடி தீர்மானிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
-நூருல் ஹுதா உமர்