சூடான செய்திகள் 1

கொழும்பு – புதுக்கடையில் நீதிமன்ற கட்டிடத் தொகுதி இனி இல்லை

(UTVNEWS | COLOMBO) -கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடப்பற்றாக்குறை காரணமாக குறித்த இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்துக்கு மாற்றநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இடத்தின் இடப்பற்றகுறை மற்றும் பழைமை அடைந்துள்ளமையினால் அதற்கான தீர்மானமாக புதிய கட்டிடத்திற்கு 06 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டதாகவும் நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக 94.55 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றைய வானிலை…

தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

மன்னார் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் திறந்துவைப்பு