உள்நாடு

கொழும்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது

(UTVNEWS | COLOMBO) – வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுற பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்துள்ளதாக குணசிங்கபுற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 23 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட, நீர்கொழும்பு, கம்புறுபிட்டிய மற்றும் பஸ்சர பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 6 கிராம் கஞ்சாவும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் வாழைத்தோட்டம் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதிநவீன சேவைகள்!

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை – மற்றொரு மாணவனை தேடும் பணி தொடர்கிறது

editor

அஜர்பைஜானில் இறந்த 3 இலங்கை பெண் மாணவிகளின் உடல்கள் இலங்கைக்கு [VIDEO]