வகைப்படுத்தப்படாத

கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடு ஜனவரி முதலாம் திகதி முதல் தடை

(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் தொழிலாக யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் 600க்கும் அதிகமானவர்கள் எந்தவித செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது யாசகத்தில் ஈடுபடுகின்றனர்.

அவர்களை  உரிய புனருத்தாபன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.

தொழிலாக யாசகத்தில் ஈடுபடுவோர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அந்த தொழிலை கைவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழ்கையை நடாத்திச் செல்ல முடியாதவர்கள் நகர நன்கொடை ஆணையாளரை சந்திக்குமாறும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Heavy traffic near Nelum Pokuna, Green Path

தேயிலை தோட்டத்தில் பிடிப்பட்டுள்ள இராட்சதன்!!

No evidence to claim IS linked to Easter Sunday attacks – CID