உள்நாடு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடாக சிகிச்சை பெறுவோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடாக  சிகிச்சை பெறுகின்ற வெளிநோயாளர்களுக்கு தொலைபேசி ஊடாக மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்தாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டி.கே விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 0113 61 87 24 அல்லது  076 8185 157 மற்றும் 0112 69 11 / 112 போன்ற இலக்கங்களின் ஊடாக மருத்துவ ஆலோனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரமே இந்த சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத்தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ள Cap Snap Lanka

editor

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

editor