உள்நாடு

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

‘ஐஎன்எஸ் வேலா’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளம் கொண்டதுடன், 53 கடற்படையினருடன் நாட்டை வந்தடைந்தது.

‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, ​​இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காகவும், இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில், பங்கேற்க உள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலில் வருகை தந்த கடற்படை தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறந்த சூழல் இல்லை

பேரூந்து கட்டணத்தில் திருத்தம்

ராவணா எல்ல பாதுகாப்பு வனப்பகுதியில் தீப்பரவல்