உள்நாடு

கொழும்பு தாமரை கோபுரத்தில் அறிமுகமாகவுள்ள Bungee Jumping

2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் Bungee Jumping (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் Bungee Jump ஈர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு கோபுரத்திலிருந்து மேற்கொள்ளப்படும் உலகின் மிக உயரமான பங்கி ஜம்ப் ஆகும்.

கட்டமைப்பு பொறியியலாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தற்போது திட்டமிடல் மற்றும் பொறியியல் கட்டத்தில் உள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதையும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான தெற்காசியாவின் முதன்மையான இடமாக தாமரை கோபுரத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இந்த திட்டம் விளையாட்டு அமைச்சின் கீழ் அல்ல, வணிக ரீதியானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் இலங்கையின் சாகச சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்து – வெளிநாட்டவர்கள் காயம்

editor

2022 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

editor