வகைப்படுத்தப்படாத

கொழும்பு கோட்டை – தலைமன்னார் தொடரூந்து சேவைகள் இன்று முதல் மட்டு!

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் வரையிலான தொடரூந்து சேவைகள் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த சேவைகள் மதவாச்சி வரையில் மாத்திரமே இடம்பெறும் என தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த தொடரூந்து வீதியில் மதவாச்சி மற்றும் செட்டிக்குளத்திற்கு இடையில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகளின் நிமிர்த்தமே இவ்வாறு தொடரூந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

அமெரிக்கா மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு

கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம்

பிரதமர் வடமராட்சி பகுதிக்கு விஜயம்