உள்நாடு

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்!

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் Founders Day 2024

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா ?

editor

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை ஆணைக்குழு அங்கீகரிக்குமா? இன்று கூடி-முடிவு