உள்நாடு

கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள்

(UTV | கொவிட் 19) -கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கொவிட் 19 வைரஸ் பரவலானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சுகாதார சேவைகள் பிரிவினர் சிறப்பான முறையில் செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் 4 திகதி  நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது தொடர்பில் தெரிவிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

லெபனான் – காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு

AC Mahagedara தனியார் நிறுவனத்துக்கு Diamond Excellence விருது

editor

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு