கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில், நேற்று (16) மாலை கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரின் கைகளில் இருந்த இரு குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
இதில், பெண் குழந்தை ஒருவர் கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மேலும், குழந்தைகளின் தாய், முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றொரு நபர் ஆகியோர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர், களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 3 மாதங்கள் மற்றும் 23 நாட்கள் வயதுடைய சிறுமி ஆவார்.