உள்நாடு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி நாளை மறுதினம் திறக்கப்படமாட்டாது

(UTV|கொழும்பு) – கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி போக்குவரத்திற்காக நாளை மறுதினம்(22) திறக்கப்படாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமிந்த அத்துலுவாகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஊரடங்கு உத்தரவினை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடித்ததை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 22 ஆம் திகதி திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏற்கெனவே அறிவிக்கப்படி, தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவ – ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்

editor

உர மானியத்தை வழங்கும் பணிகள் இன்று முதல் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

editor