உள்நாடு

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் கொழும்பு 01 இல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை!

உலகின் தலைசிறந்த பயண இடங்களுள் இலங்கைக்கு புதிய அங்கீகாரம்

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 403 பேர் கைது