உள்நாடு

கொழும்பில் திருமண நிகழ்வு – விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில், ஊரடங்கு உத்தரவை மீறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் திருமண நிகழ்வு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று காலை திருமண நிகழ்வொன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கமைய, கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையின் போது 35 பேர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

மேல் மாகாணத்தில் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் திருமண நிகழ்வுகள், விழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படக் கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

MV XPress pearl : 20 பேரிடம் வாக்குமூலம்

பட்டம் விட்டு விளையாடிய 7 வயது சிறுவன் திடீர் மரணம்

editor

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச உரிமை இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!