உள்நாடு

கொழும்பில் ஒன்றுசேரும் தமிழ் எம்பிக்கள்!

(UTV | கொழும்பு) –   தமிழர்களின் அபிலாஷை சமஷ்டி முறையிலான தீர்வுதான் என்பதை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே குரலில் வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைத்துள்ள கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பில் சம்பந்தனின் வீட்டில் நடைபெறும் எனத் தெரிகின்றது.

முன்னர் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெறாமல் போன இந்த கூட்டத்தை புதிய திகதியில் ஒழுங்கு செய்யும் பொறுப்பு தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவர் 24ஆம் திகதி இக்கூட்டத்தை நடத்தும் ஒழுங்கு குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் சுமந்திரன், சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என அறியவந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு இந்தக் கூட்டம் பற்றிய தகவலை அறிவிக்கும் பொறுப்பு எம்.ஏ.சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அறியவந்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் – இலங்கை கண்டனம்

editor